மோரோக்காவில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ்


அடுத்த ஆண்டு மோரோக்காவில் 2 நாட்கள் திருத்தந்தை பிரான்சிஸ் பாப்பிறை பயணம் மேற்கொள்வார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.

 

மேரோக்கா அரசர் ஆறாம் முகமதுவின் அழைப்பை ஏற்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 மற்றும் 31ம் நாட்கள் ரபாத் மற்றும் கசாப்லான்கா நகரங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் பயணம் மேற்கொள்வார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

 

நவம்பர் 13ம் தேதி வெளியிட்ட செய்தியில் வத்திக்கான் இதனை குறிப்பிட்டுள்ளது.

 

திருத்தந்தையின் இந்த பயணத்தின் விவரமான வெளியீடு பின்னர் வெளியாகும்.  

 

திருத்தந்தை பிரான்சிஸ் மோரோக்காவில் பயணம் மேற்கொள்ளலாம் என்ற செய்தி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பரவியது.

 

வத்திக்கானோடு இணைந்து அரசு அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைத்து வருவதாக இத்தாலிய கௌரவ தூதரக அதிகாரியான வின்சென்ஸோ அபினயன்டெ கூறியதை அடுத்து அந்த செய்தி அனைவருக்கும் வெளியே தெரியவந்தது,

Add new comment

2 + 11 =