மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் தேர்தலில் போட்டி


வாரணாசி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பிரதமருமான நரேந்திர மோடியை எதிர்த்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்னு தலைமையில் 111 விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.

முன்பு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் தில்லியில் 100 நாள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழக விவசாயிகளின் குரலுக்கு இந்திய தலைமையமைச்சரான நரேந்திர மோடி செவிசாய்க்கவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து சுமார் 300 விவசாயிகள் விரைவில் வாரணாசிக்கு சென்று அய்யாக்கண்ணுவும், 110 விவசாயிகளும் மோடியை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

Add new comment

3 + 16 =