மோசமான வறுமையில் படைப்பாற்றல் மிக்க தொழில்முனையும் பண்பு தேவை – திருத்தந்தை


உலக நாடுகளில் நிலவும் மோசமான வறுமையின் காரணமாக படைப்பாற்றல் மிக்க தொழில்முனையும் பன்பு மிகவும் அவசியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

 

ஒருவர் தன்னிடம் வைத்திருக்கும் செல்வத்தை கொண்டு தாரள மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

உலகில் பசி, பட்டினி இருக்கிறது என்றால், உணவு இல்லை என்பதால் அல்ல என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

 

சுதந்திரமான தொலைநோக்குடைய தொழில்முனையும் தன்மைதான் இப்போது மிகவும் தேவைப்படுகிறது. இதனால், போதுமான உற்பத்தியும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் உருவாகி விநியோகம் உறுதிப்படும் என்றும் அவர் கூறியு்ளளார்.

 

நாம் சொத்துக்களை கொண்டிருப்பது ஒரு பொறுப்புணர்வு என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நம்மிடம் இருக்கும் பொருட்களை படைப்பாற்றலோடு பெருக்கி கொள்ளும் வாய்ப்பை இவை வழங்குகின்றன. தாரள மனப்பான்மையோடு அவற்றை பயன்படுத்தி அன்பிலும், சுதத்திரத்திலும் வளர்வோம் என்று திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.

Add new comment

2 + 1 =