மோசமான பேரிடர் செயல்பாட்டை கண்டிக்கும் பிலிப்பீன்ஸ் மதக்குரு


பிலிப்பீன்ஸில் வீசிய புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட மேசமான உதவிகளையும், இரக்கத்தையும் பேராயர் ஒருவர் விமர்சித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்டோருக்கு அதிக உதவிகளை வழங்க வேண்டுமென முறையிட்ட காசெரெஸ் உயர் மறைமாவட்ட பேராயர் ரோலாண்டோ டிவா டிரோனா, சமீபத்திய பேரிடர் குறிப்பாக, காமாரினஸ் சுர் மாகாணத்தில் வாழ்வோருக்கு வந்த வலியும், சொல்லப்படாத துயரம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

வரயிருந்த பேரிடர் பற்றிய கடைசிநேர எச்சரிக்கை உயிரிழப்பை அதிகரிக்க செய்தது என்று தெரிவிக்கும் இந்த பேராயர், அரசு கூட இது பற்றி அறியாமல் இருந்து விட்டது என்று கூறியு்ளளார்.

 

பிகோல் பிரதேசத்தில் வீசிய வெப்ப மண்டல புயலால் 126 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பீன்ஸ் தேசிய பேரிடர் ஆபத்து தடுப்பு மற்றும் மேலாண்மை பேரவை ஜனவரி 7ம் தேதி அறிவித்தது.

 

60 பேர் காயமடைந்தனர். 26 பேரை இன்னும் காணவில்லை.

 

இந்த பேரிடரால் 6 லட்சத்து, 24 ஆயிரத்து 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில், 57 ஆயிரத்து 786 பேர் வெளியேற்ற மையங்களில் உள்ளனர்.

 

சுமார் ஆறாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் ஆடைகள் பற்றிய தகவல்களை இந்த மறைமாவட்டத்தின் சமூக சேவை மையம் ஆராய்ந்துள்ளதாக பேராயர் டிரோனா கூறியுள்ளார்.

 

ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு அதிக இரக்கம் காட்டப்பட வேண்டும் என்றும், பிறருக்கு உதவுவது என்பது தனக்கே பகிர்ந்து கொள்வதாக இருக்கக்கூடாது என்றும் இந்த பேராயர் கூறியுள்ளார்.

 

இந்த ஆண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல்வாதிகள் இந்த பேரிடரில் இறந்தோரின் செலவுகளை ஏற்க போட்டிப்போடுவதை பற்றி கேள்விப்பட்டதாக கூறும் பேராயர் டிரோனா, இது கிறிஸ்தவ முறையல்ல என்று கண்டித்துள்ளார்.

Add new comment

5 + 15 =