மோடி ஆட்சியில் இந்தியாவின் கடன் 50 சதவீதம் அதிகரிப்பு


இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் கடன் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.  

 

மத்திய அரசின் கடன் குறித்த 8-வது ஆய்வறிக்கையில் இந்திய கடன் தொகை ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக  மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இருந்த நாட்டின் கடன் ரூ.54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடியாகும்.

 

கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசின் கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

அரசின் கடன் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் பொதுக்கடனாகும்.

 

சந்தையில் மத்திய அரசு கடன் பெற்ற அளவும் 47.5 சதவீதம் அதிகரித்து, ரூ.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

 

நடப்பு நிதியாண்டில் முதல் 8 மாதங்களில் அதாவது நவம்பர் மாதம்வரை, நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ.7.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Add new comment

9 + 3 =