மேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் 1,00,000 அபராதம்


மேற்கு வங்கத்தில் எச்சில் துப்பினால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறையாகியுள்ளது.

 

இவ்வாறு பொது இடங்களை அசுத்தம் செய்யும் வகையில் எச்சில் துப்புவதற்கு மிக அதிக தண்டனை விதிக்கும் மாநிலடாக மேற்கு வங்கம் மாறியுள்ளது.  

 

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள தக்ஷ்ணே்ஷ்வர் காளி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலத்தை கட்டி திறந்து வைத்தார்.

 

அந்த மேம்பாலம் வழியாக சென்ற மம்தா பானர்ஜி, அந்த வழி முழுவதும் வெத்தலை, பான்பராக்கு, குட்கா எச்சில் துப்பி பாலம் திறந்து கொஞ்ச நாட்களில் மிகவும் அசுத்தமாக்கி விட்டதாக மம்தா கவலையடைந்துள்ளார்.

 

நகரின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு அசுத்தம் செய்வது கவனத்தை ஈர்த்துள்ளதால், பொது இடத்தில் அசுத்தம் செய்வோருக்கு 50 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்ற சட்டத்தை திருத்தி 5,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை அமைத்துள்ளார்.

 

பொது இடங்களில் அசுத்தம் செய்வோரை கண்காணிப்பதற்கு 11 உறுப்பினர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

Add new comment

4 + 10 =