மேகதாது அணை – தமிழக அரசின் மனுவை விசாரிக்க கூடாது: கர்நாடக அரசு


மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு அறித்துள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்கான வரைவறிக்கைக்கு காநாடக மாநில அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

 

அணை கட்டுவதற்கான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது.

 

இதனை ஏற்றுக் கொண்ட நீர்வள ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக நீர்ப்பாசனைத்துறைக்கு உத்தரவிட்டது.

 

உடனடியாக, கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்தது.

 

இந்த பின்னணியில் மேகேதாட்டு அணைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை விசாரிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

 

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான வழக்கின்போதே காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியை பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

எந்தவித அனுமதியும் பெறாமல் கர்நாடக அரசு இதுவரை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.

Add new comment

6 + 0 =