மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழகம் வழக்கு


மேகதாதுவில் அணை கட்டுவதற்கு இந்திய நடுவண் அரசு கர்நாடகாவிற்கு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

 

இதில், மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவை அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை விடுக்க்பபட்டுள்ளது.

 

இதற்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கோரியும் உச்ச நீதிமன்றத்தில், தமிழ் நாட்டு அரசு இடைக்கால மனு தாக்கல் செய்திருக்கிறது. .

 

இதற்கு முன்னால் நிலுவையிலுள்ள வழக்கில், இடைக்கால மனுவாக இதனை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் இந்த மனுவின் நகலை தமிழக அரசு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Add new comment

3 + 4 =