மேகதாதுவில் அணை – அனைத்து கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு


மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் அழைப்புவிடுத்துள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது

 

இது பற்றி ஆராயந்து செயல் திடடம் வகுக்க  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்' நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயன்று வருகையில், தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

 

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Add new comment

13 + 4 =