மெக்ஸிகோ – எரிபொருள் குழாய் வெடித்து 71 பேர் உயிரிழப்பு


வெள்ளிக்கிழமை மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடித்ததில் இதுவரை குறைந்தது 71 பேர் உயர்ந்துள்ளனர்.

 

மெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருள் கொண்டுசெல்லும் குழாயை சேதப்படுத்தியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

 

அந்த குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக சென்ற பலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்திய புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையால் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

 

Add new comment

1 + 6 =