மூத்த கர்தினாலுக்கு தண்டனை – வத்திக்கான் வருத்தம்


சிறாருக்கு பாலியல் குற்றங்கள் இழைத்த குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கார்டினால் ஜார்ஜ் பெல் தண்டனை பெற்றிருக்கும் செய்தியால் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக கத்தோலிக்க தலைமைப்பீடமான வத்திக்கான் தெரிவித்துள்ளது.

 

மேல் முறையீடு செய்து, அனைத்து வழிமுறைகளும் நிறைவாகும் வரை, கார்டினல் ஜார்ஜ் பெல் பொது பணிகளில் இருந்தும், குழந்தைகளிடம் இருந்து விலக்கி வைக்கப்படுவார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாக வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.,

சிறார் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை பெற்றுள்ள மிகவும் மூத்த கத்தோலிக்க மதகுரு கருதினால் ஜார்ஜ் பெல் ஆவார்.

 

1990ம் ஆண்டுகளின் இறுதியில் மெல்போர்ன் பேராலயத்தில் பணியாற்றியபோது, அந்த தேவாலய இசைக்குழுவில் இருந்த 13 வயதான சிறுவர்கள் இருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கர்தினால் பெல் குற்றங்காணப்பட்டுள்ளார்.

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் தண்டனை பெற்றார்.

 

ஆனால், இந்த வழக்கின் விசாரணையைப் பற்றிய செய்திகளை வெளியிடுவதற்கான தடைகள் இப்போதுதான் நீக்கப்பட்டுள்ளன.

Add new comment

3 + 6 =