மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது 


மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இலக்கியத்திற்கு அளிக்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது தமிழில் மூத்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2014-ஆம் ஆண்டு அவர் எழுதிய சஞ்சாரம் புத்தகத்திற்காக வழங்கப்படுகிறது.

 

கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பேசும் நாவலாக சஞ்சாரம் நாவல் உருவானது.

 

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், 1984-ஆம் ஆண்டிலிருந்து புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், திரைக்கதை, திரைப்பட உரையாடல்கள் உள்ளிட்ட படைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

தன்னுடைய உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அவர் அறிமுகப்படுத்தியும் வருகிறார்.

 

ஆங்கிலம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவரது சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக உள்ளார்.

 

25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்திருப்பதால் ஒட்டு மொத்த எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Add new comment

4 + 0 =