மூடப்படும் ஆபத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வங்கி ஏ.டி.எம்-கள்


இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வங்கி ஏ.டி.எம்-கள் மூடபப்டும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வங்கி ஏ.டி.எம்-கள் மூடப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

 

நாடு முழுவதுமுள்ள மொத்தம் 2 லட்சம் வங்கி ஏ.டி.எம்-களில் சுமார் 60 சதவீதம் மூடப்பட்டால், பணச்சேவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.

 

இப்போது பயன்பாட்டில் இருக்கின்ற ஏ.டி.எம்-களின் மென்பொருள் மற்றும் வன்பொருள் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் வங்கி ஏ.டி.எம்-களை பராமரிப்பதற்கு செலவு அதிகமாகி வருவதால், இந்த செலவினங்களை சந்திப்பதற்கு எந்த திட்டங்களையும் வங்கிகள் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

எனவே, ஏ.டி.எம்-கள் பெரும் அளவில் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது.

Add new comment

5 + 4 =