முஸ்லிம் மதகுருக்கள் கூட்டத்தில் தற்கொலை தாக்குதல், 50 பேர் பலி


ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் முஸ்லிம் மதகுருக்கள் நடந்திய கூட்டத்தில் நிகழந்த தற்கொலை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

''காபூலிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு மதகுருக்கள், பண்டிதர்கள் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அந்த மண்டபத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் உடலில் கட்டயிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.

 

சம்பவ இடத்திலேயே 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று பொது சுகாதாரத்துறை அமைச்சர் வாஹித் மஜ்ரோ கூறியுள்ளார்.

 

இந்த  தற்கொலை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.

 

தலிபான் தீவிரவாதிகள், ஐஎஸ் அமைப்பினர் இதுபோன்று மதகுருக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதால் அவர்களை சந்தேகிப்பதாக அமைச்சர் வாஹித் கூறியுள்ளார்.

 

இந்தக் கொண்டாட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கோரவில்லை என்று தெரிகிறது. எdனவே தாக்குதல் எளிதாக நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்பர் கானி இந்த தwற்கொலை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளார்.

Add new comment

8 + 12 =