முஸ்லிம் தன்னாட்சி பிரதேசம் உருவாக்கும் சட்டத்திற்கு மக்களிடம் வாக்கெடுப்பு


மிண்டனாவோ-வில் இருக்கின்ற தற்போதைய முஸ்லிம் பிரதேசத்தை விரிவாக்குவதற்கு உருவாக்கும் சட்டத்தை அனுமதிப்பது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

 

புதிய அரசியல் அமைப்பை மிண்டனாவோ-வில் அமைப்பது என்பது 2014ம் ஆண்டு பிலிப்பீன்ஸ் அரசு மோரோ கிளர்ச்சியாளர்களோடு ஏற்படுத்திய அமைதி உடன்படிக்கையாகும்.

 

இரண்டரை மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் முன்னர் அறிவித்திருந்தது.

 

மிண்டனாவே-வில் புதிய முஸ்லிம் தன்னாட்சி பிரதேசத்தை உருவாக்கும் சட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை பிலிப்பீன்ஸின் தெற்கிலுள்ள கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் முடுக்கிவிட்டிருந்தனர்.

Add new comment

1 + 5 =