முதல் உலகப்போர் நூற்றாண்டு நினைவு


பிரான்ஸின் தலைநகர் பாரீஸில், முதல் உலக போரின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தலைவர்கள் ஒன்றாக கூடி அஞ்சலி செலுத்தினர்.

 

 

போரில் உயர்நீத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக, உலகின் 70 முக்கிய நாடுகளுடைய தலைவர்கள் பாரீஸிற்கு வந்திருந்தனர்.

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், கனடா தலைமையமைச்சர் ஜஸ்டின் ட்டூடோ ஆகியோருடன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

 

பாரிஸில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தின் முன்னபாக, ஊர்வலமாக வந்த உலகத் தலைவர்கள் சரியாக காலை 11 மணிக்கு மணி அடித்ததும், முதல் உலகப் போரில் உயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

அந்த நிகழ்வில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், உலகில் பல நாடுகள் தேசியவாத மனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றன. தேசப்பற்று வேறு. தேசியவாதம் வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று தெரிவித்தார்.

 

இந்த கருத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரான்ஸை விட தேசியவாதம் அதிக கொண் நாடு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Add new comment

6 + 6 =