முதல் உலகப்போர்: இறந்த இந்தியர் நினைவாக சிலை


இங்கிலாந்தில் உள்ள மேற்கு மிட்லாண்ட்ஸ் அருகே ஸ்மெத்விக் என்னும் ஊரில் முதலாம் உலகப் போரில் போரிட்ட இந்திய வீரர்களின் நினைவாக சிலை திறக்கப்பட்டுள்ளது.

 

முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் இந்தியப் படை சார்பாக லட்சக்கணக்கான தெற்காசிய வீரர்கள் போரில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் அனைவரையும் நினைவுகூரும் விதமாக சீக்கிய வீரரின் தோற்றத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

சொந்த நாடே இல்லாத ஒரு நாட்டுக்காக ஆயிரக்கணக்கான மைல்கள் தாண்டி வந்து போரிட்டு, தங்கள் உயிரையே தியாகம் செய்த வீரர்களுக்கு சிலை திறப்பதில் பெருமை அடைவதாக இதனை முன்னெடுத்த குருத்வாரா சங்கம் தெரிவித்திருக்கிறது.

.

1918-ல் தொடங்கிய முதலாம் உலகப் போரின் நூற்றாவது ஆண்டு நினைவை அடையாளப்படுத்தும் விதமாக 10 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

Add new comment

13 + 0 =