முதலாம் உலகப்போர் நினைவு: அமைதி செய்தி வழங்கிய திருத்தந்தை


முதல் உலகப்போர் நிறைவு பெற்று 100 ஆண்டுகள் ஆனதை திருத்தந்தை பிரான்சிஸ் நினைகூர்ந்தபோது. ஞாயிற்றுக்கிழமை உலக நாடுகளிலுள்ள தோவாலங்களின் ஆயிரக்கணக்கான ஆலய மணிகள் ஒன்றாக ஒலித்துள்ளன.

 

 

மிக கொடிய சோக நிகழ்வில் பலியானோர் பற்றி நினைவுகூாகின்றபோது, அமைதிக்கான முயற்சிகளில் முதலீடு செய்வோம். போருக்கு அல்ல” என்று திருத்தந்தை பிரானசிஸ் தெரிவித்துள்ளார்.

 

போர் கலாசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓர் எச்சரிக்கையாக இந்த முதலாம் உலகப்போரின் நினைவு அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்ற மோதல்கள் முடிவுக்கு வருவதற்கு எல்லாவித முறையான நடவடிக்கைகளையும் தேடி கண்டபிடிக்க வேண்டுமென திருத்தந்தை பிரானசிஸ் இறைமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add new comment

2 + 0 =