முடிசூடினார் மலேசியாவின் 16வது மன்னர்


மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா முடிசூட்டப்பட்டுள்ளார். 

 

ஐந்தாம் சுல்தான் முகமது பதவி விலகி ஒரு  மாதம் கழித்து வியாழக்கிழமை பெஹாங் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தான் அப்துல்லா மன்னராகியுள்ளார்.

 

மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் முன்னிலையில் நடந்தேறியது.

 

மலேசிய மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார்.

 

ரஷ்ய அழகியை அவர் திருமணம் செய்துகொண்டதால்தான் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

 

ஆண்டாண்டு காலமாக இஸ்லாமிய மன்னர்களால் ஆளப்படும் மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர்.

 

இந்த மாநிலங்களில் உள்ள மன்னர் குடும்பத்தினர், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுவார்.

 

மலேசிய மன்னர் மற்றும் அவரது குடும்ப செலவுகளுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.8.6 கோடியை ஒதுக்க அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

Add new comment

3 + 1 =