மீண்டும் வட கொரிய தலைவரை சந்திக்கும் டிரம்ப்


வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உ்னை பிப்ரவரி மாதத்திற்குள் சந்திக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காலும், வட கொரியாவும் இரு துருவங்களாக விளங்கி வந்தது.

 

வட கொரியா அவ்வப்போது செய்து வந்த ஏவுகணை ஆய்வையும், அணு ஆய்வையும், அமெரிக்காவும், பல்வேறு நாடுகளும் விரும்பவில்லை.

 

ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் உலகமே வியக்கிற வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடைபெற்றது.

 

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் பெயரளவுக்கு கையெழுத்தானது.

 

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிப்பதற்கு டிரம்பும், கிம்மும் உறுதி அளித்தனர். .

 

ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வட கொரியா உறுதியான நடவடிக்கை எடுக்காததால் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

 

வட கொரியா மீதான தடைகளை விலக்க அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வட கொரியா வேறு பாதைகளை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்ற இந்த புத்தாண்டு உரையின்போது, கிம் ஜாங்-உன் பேசியிருந்தார்.

 

மீண்டும் உச்சி மாநாடு நடத்தி டிரம்பை சந்திக்கவும் கிம் ஜாங்-உன் விருப்பமும் தெரிவித்திருந்தார்.

 

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட சிறப்பு தூதரான கிம் யாங் சோல், அதிபர் டிரம்பை சந்தித்தபோது, கிம் ஜாங்-உன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார்.

 

இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

Add new comment

10 + 10 =