மாலத்தீவு அதிபர் பதவியேற்பில் இந்திய தலைமையமைச்சர்


மாலத்தீவின் புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக்கின் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்திய தலைமையமைச்சர் மோடி கலந்து கொண்டார்.

 

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி மாலத்தீவுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவுகள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இப்ராஹீம் முகமது சாலிக் வெற்றிப் பெற்றார்.

 

அவரது பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்ற நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சார்க் கூட்டமைப்பின் எல்லா நாடுகளிலும் பயணம் மேற்கொண்டு்ள்ள இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, மாலத்தீவுகளுக்கு மட்டும்தான் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த மார்ச் மாதம் திட்டமிட்டிருந்த மோடியின் பயணம், மாலத்தீவில் நிலவிய அரசியல் குழப்பங்களால் ரத்தானது குறிப்பிடத்தக்கது

Add new comment

4 + 0 =