மாநில அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசிடம் பகிர போவதில்லை – மம்தா


மாநில அரசின் முக்கிய தகவல்களை மத்திய அரசோடு பகிரப்போவதில்லை என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

மேற்குவங்க மாநிலம் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.

 

மாநில அரசுகளின் எ்லலா முக்கிய தகவல்களையும் மத்திய அரசு கேட்டு வாங்கி அதனை அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது.

 

இதன் காரணமாக மாநில அரசுக்காக தdனிப்பட முறையில் உருவாக்கப்பட்டுள்ள போர்டலில் அனைத்து தகவல்களை சேகரித்து கொள்ளலாம் என்று மத்திய அரசிடம் தெரிவித்து விடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

மாநிலத்தின் சிறுபான்மையின மக்களின் தகவல்களை பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசு, அவர்களுக்கு நிதி ஒதுக்குவது இல்லை.

 

மத்திய அரசைப்போல மாநில அரசும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். .

 

நாட்டிலுள்ள அனைத்து கணினி தகவல்களையும் கண்காணிக்க, மத்திய புலனாய்வு துறை, ஐபி, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

3 + 8 =