மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு


சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி வரை வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி வழங்கி லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இந்திய வங்கிகளிடம் கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை திரும்ப செலுத்தாமல் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார்.

 

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தியா தொடுத்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய்பபட்டு வந்தது.

 

இந்த மாதம் டிசம்பர் 4ம் தேதி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவர் இங்கிலாந்தில் இருந்து கடத்தப்பட்டார்.

 

அவர் நாடு கடத்தப்பட்ட மறுநாளே விஜய் மல்லையா கடனை திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

 

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை, இந்திய புலனாய்வு துறை (சிபிஐ) வரவேற்றுள்ளது.

 

இந்திய அரசுக்கு சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதால், இவ்வாறு பண மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடியோர் பெரும் அச்சத்தில் மூழ்குவர் என்று நம்ப்படுகிறது.

 

இந்நிவையில், விஜய் மல்லையா விரும்பினால் 2 வாரத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

 

லண்டன் உயர்நீதிமன்றத்தில், வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவிற்கு விஜய் மல்லையா கொண்டு வரப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

 

அவர் மீது விசாரணை நடைபெற்றாலும், முழு கடனையும் வட்டியோடு வங்கிகளிடம் திருப்பி ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமே நிலவுகிறது.

Add new comment

8 + 4 =