மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் ஒப்புதல்


இந்திய வங்களில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு,  வெளிநாடு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அனுப்ப இங்கிலாந்து இசைந்துள்ளது.

 

விஜய் மல்லையா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர்.

 

கிங்பிஷர் விமான நிறுவனம் துவங்க, வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். அந்த நிறுவனம் நஷ“டமடையவே, கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார்.

 

இது சம்மந்தப்பட்ட வழக்கில் மல்லையாவை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

 

விஜய் மல்லையா மோசடிக்காரா், சதிகாரா், பணமோசடி செய்தவர் என்று குறிப்பிட்ட நீதிமன்றம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.

 

பொருளாதார குற்ற வழக்குகளை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

அவரை பொருளாதார குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தால் அவரது சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

 

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Add new comment

5 + 1 =