மலேசியாவில் புதிய மன்னர் அறிவிப்பு


மலேசியாவின் 16-வது மன்னராக சுல்தான் அப்துல்லா இப்னி சுல்தான் அஹ்மது ஷா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனவரி 31-ம் தேதி சுல்தான் அப்துல்லா அதிகாரபூர்வமாக மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என்று தெரிய வருகிறது.

 

கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் மலேசிய மன்னராக பதவியேற்ற மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மது, பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கடந்த ஜனவரி 6-ம் தேதி பதவி விலகினார்.

 

ரஷ்ய அழகி ஒருவரை திருமணம் செய்ததால் அவர் ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின.

 

அரண்மனையில் இருந்து இது தொடர்பாக கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.

 

மலேசியாவில், 9 மாநிலங்களில் அரச பரம்பரையினர் ஆட்சி செய்கின்றனர்.

 

இந்த மாநிலங்களில் மன்னர் குடும்பத்தில் உள்ளவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு மன்னராக முடிசூட்டப்படுவார்.

 

பஹாங் மாநிலத்தின் தலைவராக 59 வயது சுல்தான் அப்துல்லா, புதிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Add new comment

6 + 9 =