மறைபரப்புவதற்கு தைவான் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு


மறைபரப்புவதற்கு திவ்விய நற்கருணையின் இரக்கத்தை பெற வேண்டுமென கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி தைவான் மக்களை ஊக்கமூட்டியுள்ளார்.

 

4வது தைவான் நற்கருணை மாநாட்டில் பங்கேற்கும் சுமார் பத்தாயிரம் கத்தோலிக்கர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

மார்ச் முதல் தேதியன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸின் சிறப்பு தூதராக மறைபரப்பு பேராயத்தின் தலைவரான இவர் கலந்து கொண்டார்.

 

மறைபரப்பு என்பது மறைபரப்பாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பல்ல, ஒவ்வோர் ஆயர். பாதிரியார், துறவியர் மற்றும் குழந்தைகள் உள்பட பொது நிலையினரிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று காதினால் ஃபிலோனி தெரிவித்தார்.

 

நற்செய்தியை போதிக்க ஆர்வமில்லாத திருச்சபை எந்தவொரு பலனையும் கொடுக்காது என்று அவர் மேலும் கூறினார்.

 

இந்த நற்கருணை மாநாட்டில் இருப்போர் அனைவரும் பிறரையும் அழைத்து வர வேண்டும். அடுத்த ஆண்டு இந்த நிகழ்வில் முப்பதாயிரம் பேர் கலந்து கொள்ள செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

 

தைவானின் மேற்கிலுள்ள சியாயி யுலின் வட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நற்கருணை மாநாடு எமது ஆசீர்வாதங்களின் ஆதாரம் எல்லாம் உன்னிடம்தான் உள்ளது என்ற மையகருத்தில் நடைபெற்றுள்ளது.  

Add new comment

6 + 1 =