மரியன்னையின் வீட்டை காவல்தூதர்கள் இத்தாலிக்கு சுமந்து வந்தார்களா?


கலிலியோ, மேசாட், டெஸ்கார்டெஸ் சொவான்டெஸ், புனித லிசியுஸ் தெரசா அனைவருக்கும் பொதுவானது எது தெரியுமா?

 

இவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் மேற்கொண்டு, இத்தாலியின் சிறிதொரு நகரமான லோரெடோவுக்கு வந்து, பெரியதொரு பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள கன்னி மரியாளின் வீட்டிற்குள் சென்று அதனை பார்த்து தரிசித்தவர்கள்.

 

14ம் நுற்றாண்டு தொடங்கி, கத்தோலிக்க புனித பயணிகள் இந்த புனித வீட்டை பார்க்க பெருங்கூட்மாக வந்துள்ளனர்.

 

கன்னி மரியாள் பிறந்து, வளர்ந்து, காவல்தூதர் கபிரியேலால் இறைவனின் அழைப்பை பெற்ற இந்த பாரம்பரிய வீட்டின் உள்ளே சென்று இவர்கள் பார்த்து தரிசித்துள்ளனர்.

 

வேறு சொற்களில் சொல்ல வேண்டுமானால், இதுவே நாசரேத்து ஊர் வீடாக உண்மையாகவே இருந்தால், இங்குதான் வார்த்தை மனுவுருவானார். அந்த தருணம்தான்மனித குலத்தின் வரலாறு திருப்புமுனை பெற்ற தருணமாகும்.

 

கன்னி மரியாளின் இந்த வீட்டை பாலஸ்தீனத்தில் இருந்து காவல்தூதர்கள் சுமந்து இத்தாலிக்கு கொண்டு வந்தார்கள் என்று புராண கதைகள் கூறுவதுண்டு.

 

ஆனால், நவீன காலத்தில் இந்த புரண கதையின் உண்மை தன்மையில் சந்தேகம் எழந்துள்ளது.

 

வரலாற்று ஆவணங்களும் இந்த நம்பிக்கை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலதான் தோன்றியுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.

 

1294ம் ஆண்டு டிசம்பர் 10 தேதி இந்த புனித வீடு இத்தாலியிலுள்ள லோரெடோவை வந்தடைந்தது என்று பாரம்பரிய வரலாறு தெரிவிக்கிறது.

 

13ம் நுற்றாண்டின் இறுதியில் சிலுவை போர் வீரர்கள் பாலஸ்தீனத்தில் இருந்து விரட்டப்பட்டபோது, புண்ணிய பூமியில் இருந்து அற்புதமாக இந்த வீடு மீட்டெடுக்கப்பட்டு இத்தாலிக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஆன்றோராக வாழ்ந்து வந்த பைசான்டியன் குடும்பம் ஒன்று இந்த புனித வீட்டை இத்தாலிக்கு கொண்டு வந்ததாக, திருத்தந்தையின் மருத்துவர் ஜோசப் லாப்போனி 1900-யில் வத்திக்கான் ஆவணக்காப்பகத்தில் இருந்து ஆவணங்கள் மூலம் கண்டறிந்தார்.  

 

புண்ணிய பூமியை ஆக்கிரமித்த முஸ்லிம்களிடம் இருந்து நமது மரியன்னையின் வீட்டுப் பொருட்களை மீட்டெடுத்து பின்னர் திருத்தலம் ஒன்றை கட்டுவதற்காக இத்தாலிக்கு அனுப்பியதாக இந்த ஆவணம் மூலம் தெரியவருகிறது.

Add new comment

3 + 7 =