மராவி போருக்கு காரணம் மதமல்ல –ஆய்வு


பிலிப்பீன்ஸின் மராவியில் 2017ம் ஆண்டு நடுவில் நடைபெற்ற சண்டைக்கு மதம் காரணமே இல்லை என்பதை சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

 

போர் தொடர்பாக உலக நாடுகளில் செயல்பட்டு வருகின்ற சுயாதீன குழுவான இன்டர்நேசனல் அலர்ட் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் வெளியான கண்டுபிடிப்புகளில் ஒரு பகுதி இதுவாகும்.

 

10 லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமாக அமைந்த இந்த மராவி போர் மத அல்லது மத பிரிவுகளுக்கு இடையில் நடைபெற்ற போர் அல்ல என்று இந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

கடும்போக்குடைய குழுக்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்வு கண்டிருப்பதற்கு சான்றுகள் உள்ளன என்று இந்த அமைப்புக்கான பிலிப்பின்ஸ் நாட்டு தலைவர் நிக்கி டிலா ரோஸா தெரிவித்திருக்கிறார்.

 

மின்டனோவாவில் இருந்த கடும்போக்கு குழுக்கள் தங்களுடைய இருப்பை ஆயுதங்களை பலப்படுத்தி தங்களின் தளத்தை உறுதிப்படுத்தி கொண்டன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அரசியல் மற்றும் பொருளாதாரத்தோடு தொடர்படைய பிரச்சனைகள் மின்டனாவ் இஸ்லாமிய அரசு என்று கூறப்படும் கூட்டணி உருவாக காரணமாயிற்று என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது.  

 

சட்டப்பூர்வமற்ற போதைபொருள், ஆயுத கடத்தல், ஆட்கடத்தல், பணம் பறித்தல் மற்றும் பிற குற்றவியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த குழுக்களும் இந்த கடும்போக்கு உணர்வாளர்களுடன் இணைந்து இந்த சண்டை நிகழ்ந்துள்ளதாக இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

Add new comment

1 + 1 =