மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு


மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மராத்தா சமுதாயத்தினருக்கு  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

 

இடஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக மராத்தா சமுதாயத்தினர் போராடி வருகின்றனர். அவtற்றில் சில வன்முறையாfகவம் மாறின.

 

மராத்தா சமுதாயத்தினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து மகாராஷ்டிர அரசிடம் அறிக்கை சமர்பித்தது.

 

அதன் பரிந்துரையின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

தங்கர் சமூகத்தினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பிற்படுத்தப்பட்டோர் ஆணையக்குழு ஆய்வு செய்து வருகிறது.

Add new comment

1 + 12 =