மம்தா பானர்ஜியின் திடீர் தர்ணா போராட்டம் நிறைவு


மூன்று நாட்களாக நடத்திய தர்ணா போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தார்.

 

மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள், வாடிக்கையாளா்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில் விசாரணை நடத்த வந்த சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், மாநில அரசை கலைக்கும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகளை மத்திய அரசு தூண்டிவிட்டிருப்பதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி,  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தா்ணா போராட்டத்தை தொடங்கினார்.

 

திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த  இரு மனுக்களின் விசாரணை நடைபெற்றது. கொல்கத்தா போலீசார் தடுத்ததாக சிபிஐ கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கப்பட்டபோது, எதையும் சமர்ப்பிக்க முடியவில்லை.

 

அடுத்த விசாரணையின்போது மேற்கு வங்க காவல் ஆணையர் ராஜீவ் குமார் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

 

இந்த தீர்ப்பு அறநெறி நீதியாக தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறி மம்தா போராட்டத்தை நிறைவு செய்தார்.

 

இந்த போராட்டத்தின் போது திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடுவும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.

Add new comment

3 + 1 =