மன்னாரில் அதிக எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


இலங்கையின் மன்னார் நகரில் புதைவுண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இலங்கை ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009- ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 

இந்த போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

 

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ஏராளமான மக்களை ராணுவம் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

ஏராளமான தமிழர்கள் வசித்து வந்த மன்னார் நகரில் தமிழ் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

 

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இந்த நகரம் இருந்த போரின்போது, இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது.

 

கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் நகரில் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கு பள்ளம் வெட்டியபோது ஏராளமான எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் கண்டெடுக்கப்பட்டன.

 

ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக்கூடுகள் என்று புகார் எழுந்துள்ளதால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

 

சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றாக எலும்புக்கூடுகள் குவியல் குவியலாய் அடுக்கி வைத்தது போல கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

போரின்போது வடக்கு மாகாணப் பகுதி மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று புதைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Add new comment

5 + 11 =