மத சுதந்திரத்தை அகற்ற முயல்வதை எதிர்க்கும் ஆஸ்திரேலிய ஆயர்கள்


மத அடிப்படையிலான பள்ளிகளுக்கு இருக்கின்ற பாலியல் பாகுபாடு சட்டத்தை அகற்ற சமர்ப்பிக்கப்படும் மசோதவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செய்தி தொடர்பாளரும், மெல்போர்ன் உயர் மறைமாவட்ட பேராயர் பீட்டர் கோமென்சோலி கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த பாலியல் பாகுபாடு சலுகையை மாணவருக்கு எதிரான பாகுபாட்டிற்கோ, பாலியல் அல்லது பாலின அடையாளத்தின் அடிப்படையில் பள்ளியில் இருந்து மாணவர்களை நீக்குவதற்கோ கத்தோலிக்க பள்ளிகள் பயன்படுத்தவதில்லை.

 

ஆனால், எமது இறைநம்பிக்கையின்படி, பாலியல் இங்கிதங்கள் மற்றும் திருமணம் பற்றிய கிறிஸ்தவ புரிதலை கற்றுக்கொடுக்கும் திறனை பராமரிக்க பள்ளிகள் விரும்புவதால், இந்த விதி விலக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

 

இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கத்தோலிக்க நம்பிக்கைகளை போதிக்கும் எமது உரிமை சிக்கலுக்குள்ளாகியுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

சட்ட ஆபத்துகள் இல்லாமல் மத பணிகளை தொடரும் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை என்று அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Add new comment

15 + 2 =