மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும் காங்கிரஸ்


மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் பணிகளை தொடங்கியுள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளைளும், பாரதிய ஜனதா கட்சி 109 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி2 தொகுதிகளையும், சுயேட்சைகள் 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர்.

 

மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு 116 தொகுதிகளில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

 

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 114 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் பிற சுயேட்சை மற்றும் பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முயற்சித்தது.

 

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற 5 பேரும் ஆதரவு கூறினர்.

 

இதனால், மொத்தம் 121 சட்டமன்ற உறுப்பினாகளின் ஆதரவு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

 

மாநில ஆளுநர் ஆனந்திபென்னைச் சந்தித்த மாநிலக் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

Add new comment

3 + 0 =