மத்திய பிரதேசத்தில் வாக்கு உரிமை மறுக்கப்பட்ட கிறிஸ்தவாகள்


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க ஆயர் உள்பட நுற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாக்களிக்க விடாமல் உரிமை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் அட்டையில் இல்லாததால் அவர்களை வாக்களிக்க அனமதிக்கவில்லை.

 

நவம்பர் 28ம் தேதி நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மோசடி நடைபெற்றுள்ளதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மாநில தலைநகரான போப்பால் உயர் மறைமாவட்டத்தின் பேராயர் லியோ கோமிலியோவும், நூற்றுக்கண்கான கிறிஸ்தவர்களும் தங்களுடைய வாக்குகளை போட முடியாமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

 

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற உரிய ஆவணங்கள் இருந்த பின்னரும் அவர்களை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இது திட்டமிட்ட சதி என்றும், இதனை விசாரிக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவர்களின் தலைவர் சாஜி ஆபிரகாம் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்து்ளளார்.

 

15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகின்ற பாரதிய ஜனதா கட்சி, அரசு அதிகரிகளிடம் கூறி கிறிஸ்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று இவர்களின் பெயர்களை அகற்றியிருக்கலாம் எ்னறு கிறிஸ்தவ தலைவர்கள் ஐயம் கொண்டுள்ளனர்.

Add new comment

2 + 17 =