மணமுறிவு சட்டம் இல்லாததால் திருமணத்தில் வீழச்சி


முறைப்படி கத்தோலிக்க திருமணம் செய்து கொள்வதில் வீழச்சி ஏற்பட்டிருப்பதற்கும், பிலிப்பின்ஸில் விவாகரத்து சட்டம் இ்ல்லாமல் இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என்று கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

 

ஜோடிகள் இத்தகைய அர்ப்பணத்தற்கு மிகவும் அஞ்சுவதாக பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்க்கைக்கான பணிக்குழுவின் முன்னாள் தலைவர் மெல்வின் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

 

திருமணம் செய்யாமல் இருப்பதற்கு எழ்மையை ஜோடிகள் காரணமாக சுட்டிக்காட்டினாலும், விவாகரத்தை (மணமுறிவை) திருச்சபை ஏற்றுகொள்ளாமல் இருப்பதால் இத்தகைய அர்ப்பணத்திற்கு எழுந்துள்ள அச்சமே உண்மையான காரணம் என்று எண்ணுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 

பிலிப்பீன்ஸிலுள்ள கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் விவாகரத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதோடு, இதனை சட்டபூர்வமாக்குவதை தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளனர்.

 

விவாகரத்து எளிதான தெரிவாக இருந்துவிட்டால், குடும்பங்கள் உடைவதும் எளிதாகிவிடும் என்று முன்னதாக பிலிப்பின்ஸ் கத்தோலிக்க ஆயாகள் பேரவை தெரிவித்திருக்கிறது.

 

கடந்த 10 ஆண்டுகளில் பிலிப்பீன்ஸில் நடைபெற்ற மொத்த திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுவதாக பிலிப்பின்ஸ் புள்ளிவிவர நிர்வாகத்தின் தரவுகள் காட்டுகின்றன.

 

2008ம் ஆண்டு நடைபெற்ற 4 லட்சத்து 86 ஆயிரத்து 514இல் இருந்து 2017ம் ஆண்டு 4 லட்சத்து 34 ஆயிரத்து 932ஆக திருணமங்கள் பிலிப்பீன்ஸில் குறைந்துள்ளன.   

Add new comment

11 + 2 =