மஞ்சள் ஜாக்கட் போராட்டத்திற்கு கவனமாக பதிலளிக்கும் பிரான்ஸ் ஆயர்கள்


மஞ்சள் ஜாக்கட் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகளை கண்டித்துள்ள ஆயர்கள், இந்த போராட்டங்களை தோற்றுவிக்கும் பொருளாதார நிலைமைகளை பற்றி கவலை தெரிவித்து்ளளனர்.

 

எரிபொருளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விதிக்கப்பட இருந்த கூடுதல் வரிவிதிப்பை இன்னும் 6 மாதங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக பிரான்ஸ் தலைமையமைச்சர் எட்வர்ட் பிலிப்பு கூறியுள்ளார்.

 

இதனால் கடந்த 3 வாரங்களாக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து இந்த முடிவை பிரான்ஸ் அரசு எடுத்துள்ளது.  

 

இந்திய பெருங்கடலில் இருக்கின்ற ரியூனியன் தீவிலுள்ள புனித டெனிஸ் டி லா ரியூனியன் மறைமாவட்டத்தின் ஆயர் கில்பர்ட் அயுப்ரி இந்த போராட்டத்திற்கு முதலில் பதிலளித்த கத்தோலிக்க ஆயராவார்.

 

பொது மக்களின் இந்த போராட்டமும், வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விரிவான பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஆயர் கில்பர்ட் உள்ளூர் ஊடகத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளார்.

 

இந்த போராட்டத்தை சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைத்த இயக்கத்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மகரோங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Add new comment

15 + 3 =