மசூத் அசார் மீது  தடைவிதிக்க அமெரிக்கா ஐநாவிடம் கோரிக்கை


ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது  தடைவிதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

 

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டதை சீனா தடுத்துவிட்டது.

 

சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் சேர்ந்து பிரான்ஸ் நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு கூடுதல் அவகாசம் கோரி சீனா முட்டுக்கட்டை இருந்தவிட்டது.

 

இப்போது அமெரிக்கா இந்த முயற்சியை எடுத்து அதற்கான கோரிக்கையை அனுப்பி இருக்கிறது.

 

சீனாவுக்கு எதிரான நகர்வை அமெரிக்க தற்போது எடுத்துள்ளது.

 

சீனா எதிர்ப்பை விலக்கிக் கொண்டால் போதும், இந்திய நாடாளுமன்றம், பதன்கோட், புல்வாமா தாக்குதல்களுக்கு காரணமான மசூத் அசாத்  சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார்.

Add new comment

7 + 7 =