மக்களின் அதிகார எழுச்சியில் ஏமாற்றம் தெரிவிக்கும் பிலிப்பின்ஸ் ஆயர்கள்


1986ம் ஆண்டு நிகழந்த மக்கள் அதிகார எழுச்சியின் நினைவை கொண்டாடும் இந்த வாரத்தில், இன்னும் நிறைவேற்றி முடியாத புரட்சியை முன்னெடுப்பது தோல்வியாகும் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

 

பல பிலிப்பீன்ஸ் மக்கள் சுயநலமுடைய வழிமுறைகளை இன்னும் கொண்டு வாழ்வதால், ரத்தம் சிந்தாமல் சர்வாதிகாரி பெர்டினண்ட் மார்கோஸூக்கு எதிராக நடத்தப்பட்ட எழுச்சி இன்றும் நிறைவடையவில்லை என்று நோவலிச் மறைமாவட்ட ஓய்வு பெற்ற ஆயர் தியோடோரோ பகானி தலைநகர் மணிலாவில் தெரிவித்துள்ளார்.

 

நான் மற்றும் எனது குடும்பத்திற்கு முன்னால். கடவுளும், நாடும்தான் உளள்ன என்று உண்மையாகவே சொல்லுகிற இதய புரட்சி நமக்கு தேவைப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

பிலிப்பின்ஸ் மக்களிடம் காணப்படும் குறைவான ஞாபக சக்தியை பார்த்து கவலை கொள்ள வேண்டும் என்று சோர்கோகான் மறைமாவட்ட ஆயர் அர்டுரோ பஸ்டெஸ் தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 25ம் தேதி நம நாட்டின் ஜொலிக்கின்ற மாண்பின் அடையாளங்களில் ஒரு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

நமது நாட்டில் தோன்றிய மக்களின் எழுச்சி, பிற நாடுகளில் சாவாதிகார ஆட்சியை அகற்றுகின்ற அதிகார எழுச்சியை உருவாக்கியது என்று அவர் கூறியுள்ளார்.

Add new comment

1 + 0 =