மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி - கமல்ஹாசன்


மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

 

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் ஓர் அணியும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.

 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு சில நாட்களாக பேசு பொருளாக இருந்து வந்தது.

 

அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் சேர போவதில்லை என்று உறுதியாக கமல்ஹாசன் அறிவித்துவிட்டதால், காங்கிரஸ் பக்கம் சேரலாம் என்ற எதிர்பார்ப்ப நிலவியது.

 

டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியுடன் பேசியதால் காங்கிரஸ் அணியில் கமல்ஹாசன் நிச்சயமாக இருப்பார் என்று கருதப்பட்டது.

 

ஆனால் அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட தயாராகி வருவது அவரது அறிவிப்பின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

 

Add new comment

5 + 0 =