மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பு


இலங்கை நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் தலைமையமைச்சர் பதவி ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க போலதாக இந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 

இந்த இக்கட்டான தருணத்தில் நடுநிலை வகித்தால், அராஜகம் வெற்றிபெற்றுவிடும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

தலைமையமைச்சரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இலங்கை அதிபரிடம் இல்லை என்றும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டதால், தலைமையமைச்சரை நீக்குவதாக வெளிட்ட ஹெஸட் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத ஒருவரை தலைமையமைச்சராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நேரத்தை தாமதிக்கவே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

 

மந்திரி பதவிகளையும் பணத்தையும் லஞ்சமமாகக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் இழுத்தெடுப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add new comment

3 + 0 =