போயிங் 737 மேக்ஸ் விமானங்களை இயக்க போயிங் நிறுவனமும் தடை


எத்தியோப்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 157 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் இந்த ரக விமானங்கள் இயக்கப்படுவதற்கு போயிங் நிறுவனமும் தடை விதித்துள்ளது.  

 

ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள எத்தியோப்பியாவில் ஞாயிற்றுக்கிழமை மேலேழுந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ர பயணியர் விமானம் சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

 

இதில் பயணம் செய்த 4 இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரும் உயிரிழந்தனர்.

 

எனவே, இந்த ரக விமானங்களை இயக்குவதை நிறுத்துவதாக சீனா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா நாடுகள் உள்ளிட்ட நாடுகள் தடை விதித்தன. 

 

மேலும், பிரேஸில், ஆஸ்திரேலியா, ஆர்ஜெண்டீனா, நார்வே, வியட்நாம், நியூசிலாந்து, தென்கொரியா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் போயிங் 737 மேக்ஸ் 8 விமானப் பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. 

Add new comment

2 + 6 =