போதைப்பொட்களை ஒழிப்பாதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை


பிலிப்பீன்ஸ் நாட்டில் போதைப்பொட்களின் ஒழிப்பு நடவடிக்கை அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எடுத்து வருகிறார்.

 

இதற்கு பின்பற்றப்படும் நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

 

17 வயதான சிறுவன் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று காவல்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இது தொடர்பான காவல் துறையினர் மீது பிலிப்பைன்ஸ் அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது

 

போதைப்பொருள் கடத்தல் எனக்கூறி பிலிப்பைன்ஸ் அரசு நடத்திய என்கவுன்ட்டர்களில் இந்த ஒரு வழக்கு மட்டுமே நீதிமன்றத்தால் அரசுக்கு எதிராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

பிலிப்பீன்ஸ் அதிபரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

Add new comment

11 + 0 =