பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு


பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதற்கான சட்டத்திருத்த மசோதா செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

 

பொதுப் பிரிவில் இருந்து இந்த ஒதுக்கீடு வழங்கப்படும்.

 

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கவர்கின்ற வகையில் மத்திய அரசு திடீரென இந்த இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது.

 

இதன்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளோர், மற்றும் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருப்போர் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம்.

 

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தலில் இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Add new comment

3 + 1 =