பொது மன்னிப்பு ரத்து – மீண்டும் சிறையில் பெரு முன்னாள் அதிபர்


ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரிக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கு பின்னர், அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது அந்நாடு.

 

2009-ல் விதிக்கப்பட்ட 25 ஆண்டு சிறை தண்டனையின் மீதிக்காலத்தை புஜிமோரி சிறையில் கழிக்க வேண்டுமென தெரிகிறது.

 

இது தொடர்பாக, 80 வயதான புஜிமோரியை, நீதிமன்றம் நியமித்த மருத்துவக் குழு பரிசோதித்து அறிக்கை அளித்துள்ளது.

 

பெருவின் முன்னாள் அதிபர் அல்பர்டோ புஜிமோரி 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார்.

 

அப்போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் அரசை எதிர்த்த 25 பேரை கொலை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்தில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன்,  பெருவின் அதிபர் பெட்ரோ பாப்லோ, அல்பர்டோ புஜிமோரிக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.

Add new comment

8 + 2 =