பெல்ஜியம் அருட்தந்தைக்கு மரியாதை - பெயர் மாற்றம் பெறும் ஹூப்பிள் சட்டம்


ஹூப்பிள் சட்டத்தை பெயர் மாற்றம் செய்வதற்கு ஆதரவாக சர்வதேச வானியல் ஒன்றியம் வாக்களித்துள்ளது.

 

இந்த பேரண்டம் விரிவாகியது பற்றிய கோட்பாட்டை பெல்ஜியம் அருட்தந்தையும், வானியலாளருமான ஜார்ஜ்ஸ் லமாய்டியர்  உருவாக்கியதை அங்கீகரிக்கும் விதமாக இந்த சட்டத்திற்கு பெயர் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

பேரண்டம் உருவாகியதை அறிவியல்பூர்வமாக விளக்குவதற்கு “பெரிய வெடிப்பு” கோட்பாட்டை 1966ம் ஆண்டு காலமான இயற்பியலாளரும், கணித வல்லுநருமான அருட்தந்தை ஜார்ஜ்ஸ் லமாய்டியர் உருவாக்கினார்.

 

பேரண்டத்திலுள்ளவை ஒன்றிடம் இருந்து மற்றொன்று பிரிந்து சென்று, சரியான ஈர்ப்பு விசையோடு விலகி சென்றதை ஹூபிள் சட்டம் விளக்குகிறது.

 

இந்த சட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்வது கடந்த ஆகஸ்ட் மாதம் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச வானியலாளர் ஒன்றியத்தின் 30வது பொதுப்பேரவையில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

Add new comment

1 + 2 =