பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மகிந்தா பிரதமரல்ல - சபாநாயகர்


பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை மனிந்தா ராஜபக்சேவை பிரதமராக ஏற்றுவிட முடியாது என்று சபாநாயகர் ஜெய சூரியா அறிவித்திருக்கிறார்.

 

இலங்கை அரசியலில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் திடீரென மாற்றிய அதிபர் சிறிசேன, முன்னாள் அதிபராக இருந்த ராஜபக்சேவை பிரதமராக பதிவி ஏற்க செய்தார்.

 

நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன முடக்கிவிட்டதால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

 

சிறிசேனவின் இந்த அதிரடி முடிவுகளை பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவும், சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் கடுமையாக எதிர்த்தனர்.

 

இந்நிலையில், வரும் 14-ம்தேதி நாடாளுமன்றம் கூடும் என அதிபர் சிறிசேன அறிவித்தார்.

 

பெரம்பான்மையை நிரூபிக்கும் வரை மகிந்த ராஜக்சேவை பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை சபாநாயகர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Add new comment

12 + 3 =