பெத்லேகமுக்கு அருகில் போஞ்சியுஸ் பைலட்டின் மோதிரம் கண்டுபிடிப்பு


போஞ்சியுஸ் பைலட் என்ற பெயர் பொறித்த மோதிரம் பெத்லேகமுக்கு அருகில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்க்பட்டது.

 

1968-69 வரை ஜெருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிதயோன் ஃபோஸ்டரால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட அகழ்வாய்வில் இந்த மோதிரம் கண்டறியப்பட்டதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.  

 

 

பார்வையாளர்களுக்கு திறக்கப்படுவதற்காக ஏரோது ஆண்ட இந்த இடத்தில் நடத்தப்பட்ட தயாரிப்பு பணியின்போது நடைபெற்ற அகழ்வாய்வில் ஆயிரக்கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன.

 

இந்த மோதிரம் பல்வேறு கோணங்களில் புடம் எடுக்கப்பட்டது. மது பாத்திரத்தை சுற்றி “போஞ்சியுஸ்” என்ற பெயர் எழுதப்பட்டுள்ளதை இந்த புகைப்படங்கள் தெளிவாக காட்டுகின்றன.

 

போஞ்சியுஸ் பைலட் கிறிஸ்து பிறப்புக்கு பின், 26 முதல் 36 வரை யூதேயாவை ஆட்சி செய்த ரோமானிய தலைவர்களில் ஐந்தவது நபர் ஆவார்.

 

இந்த பெயரில் வேறு யாராவது இருந்தார்களா என தெரியவில்லை என்று தெரிவித்திருக்கும் எபிரேய பல்கலைக்கழக பேராசிரியர் டேன்னி ச்சுவார்ட்ஸ், இந்த மோதிரத்திற்கு சொந்தக்காரர் சிறந்த செல்வந்தாக தெரிவதாக கூறியுள்ளார்.

Add new comment

9 + 4 =