புல்வாமாவில் மேலும் 4 ராணுவ வீரர்கள் மரணம்


இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள புல்வாமா மாவட்டத்தின் பிங்க்லானா பகுதியில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்த துப்பாக்கி சண்டையின்போது இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

உயிரிழந்த தீவிரவாதிகளை இன்னும் அடையாளம் காணவில்லை.

 

ஆனால், வியாழக்கிழமை புல்வாமாவில் நிகழ்ந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று இந்திய ராணுவம் கருதுகிறது.

 

இரவு முழுவதும் நிகழந்த துப்பாக்கிச் சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

ஆனால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

துணை காவல் படையினரும், ராணுவத்தின் எஸ்ஓஜி பிரிவினரும் இணைந்து இந்த பகுதியில் சண்டையிட்டு வருகின்றனர்.

 

கடந்த வியாழனன்று நடந்த தாக்குதலில் 40-க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டபின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

 

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

Add new comment

15 + 1 =