புற்றுநோய் சிகிச்சையில் சிறந்த முன்னேற்றம்


முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  சிகிச்சை வழங்குவதில் பெரியதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரிட்டன் அறிவியலாளாகள் தெரிவித்தள்ளனர்.

 

தற்போது கண்டுபிடித்துள்ள  டிசோடுமாப் வெடோட்டின் என்ற புதிய மருந்தை வெற்றிகரமாக பரிசோதித்து இந்த மைல் கல்லை எட்டியுள்ளதாக லண்டன் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளர்கள்.

 

இந்த புதிய மருந்து புற்றுநோய் கட்டிக்குள் சென்று அதனை பாதித்து அழிக்கின்ற ஆற்றல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

 

மருந்துகள் கொடுத்தால், எதிர்வினையாற்றுகிற புற்றுநோயோடு வாழும் நூற்று ஐம்பது பேரிடம் இந்த புதிய மருந்து பரிசோதிக்கப்பட்டது.

 

அவர்களில் கால் பகுதிக்கும் மேலானவர்களுக்கு முன்னேற்றம் காண்டுள்ளதாக இந்த அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த மருந்தால் புற்றுநோயையும் குணமாக்கும் காலம் வரலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

Add new comment

1 + 3 =