புறக்கணிக்கப்பட்டதாக உணரும் இளைஞர்களிடம் மன்னிப்பு


திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த இளைஞர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

வயது வந்த எல்லா கத்தோலிக்கர்களின் சார்பாக பேசுகையில் இந்த கருத்தை திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

 

உங்களுக்கு செவிமடுக்காமல் இருந்திருந்ததற்கு மன்னித்து விடுங்கள். இதயங்களை திறக்காமல் இருந்து உங்களது காதுகளை போதனைகளால் நிறைத்திருந்தால் மன்னிக்வும்.

 

கிறிஸ்துவின் திருச்சபையாக அன்போடு உங்களுக்கு செவிமடுக்க விரும்புகிறோம். கடவுளின் கண்களில், எங்களின் கண்களிலும் கூட, இளைஞர்களின் வாழ்க்கை மதிப்புமிக்கது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

உலக ஆயர்கள் மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்த இந்த கருத்துக்கள் இளைஞர்கள் மட்டில் திருச்சபை வைத்திருக்கும் மதிப்பை காட்டுவதாக அமைக்கிறது.

 

நமது முயற்சிகளை ஆசீர்வதிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு நாம் செவிமடுத்து, அவர்கள் சாட்சியம் இயேசுவுக்கு அளிக்க செய்ய வேண்டும் என்று உலக ஆயாகள் மாநாட்டின் நிறைவு திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை குறிப்பிட்டார்.

Add new comment

8 + 0 =